ரஜகல

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உஹன பிரதேச செயலாளர் பிரிவில் ரஜகலதென்ன கிராமத்தில் ரஜகல புண்ணியபூமி அமைந்துள்ளது. ரஜகல புண்ணியபூமி உள்ள மலை புராணத்தில் ராஸ்ஸஹெல எனும் பெயரிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த பௌத்த வதிவிடம் மகிந்த தேரரின் இலங்கை பயணக் காலத்தில் இலங்கையில் நாலாபுரத்திலிருந்து வரும் பிக்குமார்கள் வந்து தங்கும் இடங்களில் மிக  முக்கிய இடம் வகிக்கின்றது.

ரஜகலையிலுள்ள புரான கல்வெட்டில் இந்த இடம் "தன திஸ பவன" எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது. அதற்கு சிறிது காலத்திற்கு பின் செய்த கல்வெட்டில் "அரிய அரக கரிகிபலவ் திஸ பவத மக வெகெர" என  குறிப்பிடுகின்றது. அதாவது அரயாகர கிரிகும்பிலவாபி திஸ்ஸ பப்பத விகாரய எனும் பெயராகும். இங்கேயே உள்ள ΙΙ வது மகிந்த அரசனுடைய காலத்தை மதிக்கத்தக்க இன்னுமொரு கல்வெட்டில் இந்த புண்ணியபூமி "அரித்தரா வெகெர" என அறிமுகப்படுத்தியுள்ளது. தீகவாபிய நிர்வாகம் செய்த லஜ்ஜதிஸ்ஸ இளவரசன் கிரிகும்பில எனும் விகாரை செய்வித்ததென மகா வம்ஸத்தில் குறிப்பிடுகின்றது.

ரஜகல மலைச் சாரல் அண்மித்த பிரதேசம்  வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் ஜனங்கள் நடமாட்டம் இருந்ததற்கான தடையங்கள் உள்ளது. இடத்திற்கு இடம் கிடைத்த கல்லினால் ஆயுதங்கள் தயாரித்த இடங்கள் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றது. கி.மு. 3 ம் நூற்றாண்டில் ஆரம்பித்த பிக்குமார் வதிவிடங்கள் பல நூற்றாண்டு காலமாக இருந்ததாக தெரிகிறது. மலையில் இடத்திற்கு இடம் விசேஷமாக. மேற்கு சரிவு பிரதேசத்திலும் மலைச் சாரலின் வடக்கு பகுதியிலும் கற் பாறையில் நூற்றுக் கணக்கான நீர்வடி வெட்டப்பட்ட குகைள் இருக்கின்றது. தாது கோபுரங்கள், சிலை மண்டபங்கள், தான சாலைகள், போதிகரைகள், பிக்குகளின் வதிவிடங்கள், குளங்கள், நடைபாணி தவப் பாதைகள் போன்ற நூற்றுக் கணக்கான கட்டிடங்கள் பூமியில் காணக் கிடைக்கின்றது. மலைச் சாரலின் மேற்கு இறக்கத்தின் நடுப்பகுதியில் ஆச்சிரமத் தொகுதிக்கு தண்ணீர் வழங்கும் குளமொன்றும் உள்ளது. தற்சமயம் அது உடைப்பட்ட நிலையல் இருக்கின்றது.

இங்கு அனேக காலங்களுக்கு சேர்மதியான கல்வெட்டுகள் உள்ளது. புண்ணிய பூமியில் மகிந்த தேரரைப் பற்றிய கல்வெட்டு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. அதில் மகிந்த தேரரும் இட்டிய எனும் தேரருடையவும் பெயர் குறிப்பிடுவதனால் மகிந்தவின் இலங்கை பயணத்தை வம்சக் கதைகளினால் ஊர்ஜிதப்படுத்துகின்றது.

ரஜகல சிதைவுகளுக்கிடையில் அரைப் பகுதியாக செய்த புத்தர்ச் சிலை, தண்ணீர்ப் பீலியும் அத்துடனான கல்லிலான பெரிய பாத்திரங்கள் இரண்டும் உள்ளது. தண்ணீர் பீலி இன்னமும் செயற்படுகின்றது. நிறை குடங்கள் இரு கைகளிலும் தாங்கி நிற்கும் மாதிரியான காவற் கல்லும் நாக ராஜாவும் நாக அரசியும் ஜோடியாக இருக்கும் காவற் கல்லும் இவை மிக அரிதான வகையிலான கலை அம்சங்களாகும்.

கல்லிலான பாத்திரங்களுக்கு மேல் பகுதி மலைச் சரிவில் கற் பலைகைகள் கொண்டு செய்யப்பட்ட கதவுநிலை உள்ள கற்குகை இன்னும் நல்ல நிலையில் உள்ளதாக காணக் கிடைக்கின்றது.

காலத்தை நிச்சயிக்க முடியாத குகைச் சித்திரங்கள் தொகையும் அனுராதபுரக் காலத்திற்கு சேர்மதியான சுவரோவியங்கள் பகுதிகளும் இந்த புண்ணிய பூமியில் காணக் கிடைக்கின்றது.